1.25 கோடி பணம் பெற்ற விவகாரம்.. ராதிகாவிற்கு நோட்டீஸ்

பெங்களூரு நாகரபாவியை சேர்ந்தவர் யுவராஜ் சாமி (52). பாஜ பிரமுகரான இவர், பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக சமீபத்தில் கைதானார்.
விசாரணையில் கன்னட நடிகையும், திரைப்பட பெண் தயாரிப்பாளருமான ராதிகா குமாரசாமிக்கு 1.25 கோடி அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவரது அண்ணன் ரவி ராஜின் வங்கி கணக்கிற்கு 75 லட்சம் அனுப்பியதாக தெரிவித்தார். இது தொடர்பான பண பரிவர்த்தனை ஆதாரங்கள் சி.சி.பி போலீசாருக்கு கிடைத்தது.
அதை வைத்து முதலில் ராதிகா குமாரசாமியின் அண்ணன் ரவி ராஜிடம் சி.சி.பி போலீசார் விசாரித்தனர். ராதிகாவின் வங்கி கணக்கிற்கும் இதேபோன்று பணம் அனுப்பப்பட்டிருந்ததால், அவரிடம் சி.சி.பி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மாலை ராதிகாவிற்கு செல்போன் வாட்ஸ் ஆப் மற்றும் நேரில் சென்று போலீசார் நோட்டீஸ் வழங்கினர்.
அதில் இன்று காலை 11 மணிக்குள் சி.சி.பி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறியுள்ளனர்