‘வாழைப்பழ குடியரசு’ ஜார்ஜ் புஷ் வேதனை

அமெரிக்க பார்லிமென்ட் வளாகத்தில், டிரம்ப் ஆதரவாளர்கள் புகுந்து நடத்திய தாக்குதலுக்கு, முன்னாள் அதிபர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு பின் தலைவர்கள் சிலரது நடவடிக்கை வேதனை அளிக்கிறது. ஜனநாயகம் முதிர்ச்சி பெறாத வாழைப்பழ குடியரசு நாடுகளில் தான் இப்படி நடக்கும்,’’ என்றார்.
முன்னாள் அதிபர் ஒபாமா, ‘‘நாட்டுக்கே மிகப்பெரிய அவமானச் செயல்,’’ என்று தெரிவித்துள்ளார். மற்றொரு முன்னாள் அதிபரான ஜிம்மி கார்ட்டர், ‘‘இது ஒரு தேசிய பேரழிவு,’’ என்று குறிப்பிட்டுள்ளார். பில் கிளிண்டனும் இதேபோன்ற கருத்தினை பதிவு செய்துள்ளார்.