பொங்கலுக்கு சென்னையில் பேருந்து வழித்தடங்கள் மாற்றம்..!

பொங்கல் விழாவுக்காக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசு பேருந்துகள் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி, நசரத்பேட்டை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் வழியாக பயணம் செய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கார் மற்றும் சொந்த வாகனங்களில் பயணம் செய்பவர்கள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதைத் தவிர்த்து திருக்கழுகுன்றம் – செங்கல்பட்டு வழியாகவோ அல்லது ஸ்ரீ பெரும்பத்தூர் – செங்கல்பட்டு வழியாகவோ செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த வழித்தடத்தில் ஜனவரி 11,12, 13 ஆகிய தேதிகளில் மட்டும் பேருந்துகள் செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.