‘இனி தினம் ஒரு வீடியோ’; ராகுல் காந்தி புது முடிவு

நடப்பு அரசியல், வரலாறு மற்றும் சர்ச்சை விவகாரங்கள் குறித்து நாள்தோறும் வீடியோ மூலம் விளக்கம் தர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
பெரும்பாலான இந்திய செய்தி ஊடகங்களை, பாசிசவாதிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப ஆட்டுவிக்கின்றனர். செய்தி சேனல்கள், வாட்ஸ் அப் ஃபார்வேர்டு செய்திகள் மற்றும் போலி செய்திகள் மூலம் வெறுப்பை உமிழும் வரலாற்று கட்டுக்கதைகளை பரப்புகின்றனர். இந்த பொய்கள், இந்தியாவை துண்டாடி வருகின்றன.
இந்த நிலையில் தற்போதைய அரசியல் பிரச்சனைகள், வரலாறு, சர்ச்சைகள் ஆகியவை தொடர்பான உண்மைகளை நாள்தோறும் வீடியோக்கள் மூலம் விளக்க முடிவு செய்திருக்கிறேன். யாருக்கு உண்மையின் ஆர்வம் இருக்கிறதோ அவர்களுக்காக இதை செய்யப்போகிறேன். நாளை முதல் உங்களுடன் எனது சிந்தனைகளை பகிரப் போகிறேன்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.