கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கொந்தளித்த நிதிஷ் குமார்..?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், திடீரென கோபமடைந்து, உரத்த குரலில் பேசும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பீகார் மாநிலம் பாட்னாவில் இண்டிகோ விமான நிறுவன மேலாளர் ரூபேஷ் சிங் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். முதல்வர் இல்லத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணி கட்சியான பாஜகவும் போர்க்கொடி தூக்கியிருப்பதால், நிதிஷ்குமாருக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அந்த படுகொலை சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், முதல்வர் நிதிஷ்குமார் கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x