வெள்ளை மாளிகையை விட்டு புறப்படத் தயாரானார் டிரம்ப்

 புதிய அதிபராக ஜோ பைடன் வரும் 20ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். 

இதனை முன்னிட்டு தற்போதைய அதிபரான டிரம்ப் வெள்ளை மாளிகையிலிருந்து தனது உடைமைகளை பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றார். 

அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையைக் காலி செய்ய மறுத்து வந்தார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக அவரைப் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக் கொண்ட டிரம்ப் வெள்ளை மாளிகையைக் காலி செய்ய முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து டிரம்ப் படித்த புத்தகங்கள், உடமைகளை அவரின் உதவியாளர்கள் பெட்டி பெட்டியாக எடுத்துச் சென்றனர். 

இந்நிலையில் வெள்ளை மாளிகை வரலாற்று மைய அதிகாரிகள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ஒவ்வொரு அதிபரும் பதவியிலிருக்கும் போது கொண்டு வரும் பொருட்கள் கணக்கிடப்படும் என்றும், தற்போது டிரம்ப் எடுத்துச் செல்லும் பொருட்களும் கணக்கிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x