உகாண்டா தேர்தலில் மோசடி; பாபி வைன் புகார்

உகாண்டாவில் நடந்த அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக, தோற்றுப்போன எதிர்க்கட்சி வேட்பாளர் பாபி வைன் புகார் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், அதிபராக பதவி வகிக்கும் முசுவேனி, தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, ஆறாம் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இவர், 58 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரும், ராப் இசை பாடகருமான பாபி வைன், 34 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே பெற்றுள்ளார் என்று, உகாண்டா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாபி வைன் கூறுகையில், ‘எனது வீட்டை ராணுவம் சூழ்ந்துள்ளது. இன்டர்நெட் தடை செய்யப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியே விட மறுக்கின்றனர்’ என்று தெரிவித்துள்ளார். அதை மறுத்த ராணுவம், பாபி வைனுக்கு பாதுகாப்பு அளிக்கவே தாங்கள் வந்துள்ளோம் என்று கூறியுள்ளது.