இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற 5 கோடி மதிப்புள்ள கடல் அட்டை.. 3 பேர் கைது

மன்னார் வளைகுடா பகுதியில் கடத்தலை தடுப்பதற்காக, இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மற்றும் விமானம் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் மீன்பிடி படகு ஒன்று வந்தது. அந்த படகை சோதனை செய்தபோது, 1000 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் சந்தை மதிப்பு ரூ.5 கோடி என்று கூறப்படுகிறது. படகில் இருந்த 3 பேரை கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இலங்கைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
இந்த கடல் அட்டைகள் ஆபத்தான மற்றும் பாதுகாக்கப்பட்ட இனம், பவள சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகும், அவை 2001ன் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து கடல் அட்டைகள், பெரும்பாலும் இலங்கை மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. அதனை இலங்கையில் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.