லாலு பிரசாத் கவலைக்கிடம்..

பீகார் முன்னாள் முதல்வரும், இராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களாக உடல்நலம் குன்றிய லாலுவுக்கு, சில வாரங்களுக்கு முன்னர், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட லாலு, ராஞ்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 
இந்நிலையில், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x