‘நேபாள பிரதமருக்கு மனநிலை பாதிப்பா?’ அபிஷேக் சிங்வி விமர்சனம்

“உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது; ராமர் ஒரு நேபாளி ” என்று நேபாளப் பிரதமர் கே.பி.சர்மா ஒலி கூறியதற்கு, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராமர் நேபாளத்தில் பிறந்தவர். வால்மீகி ஆஸ்ரமம் நேபாளத்தில் உள்ளது. தசரதருக்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்த இடம் நேபாளில் உள்ளது என நேபாள பிரதமர் சர்மா ஒலி பேசினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் மனு சிங்வி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:-

“ நேபாளப் பிரதமர் ஒலியின் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது. சீனா எழுதிக் கொடுத்ததை திருப்பிச் சொல்லும் கிளிப்பேச்சு பேசுகிறாரா, இல்லை சீனாவின் கைப்பாவையாகி விட்டாரா என தோன்றுகிறது. முதலில் நேபாளம் இதுவரை கோராத இந்திய பகுதிகளை தங்களுடையது என்று கோரினார். இப்போது ராமர், சீதை, ராமராஜ்ஜியத்தை நேபாளத்துக்கு உரியது என்கிறார்.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x