இதற்கு வாட்ஸ்அப் தேவையில்லை.. கூகுள் மேப்ஸ் போதும்..!

வாட்ஸ் அப் சமிபத்தில் கொண்டுவந்துள்ள தனியுரிமைக் கொள்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக ஏராளமானோர் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர்.
ஆனால், பல வருடங்களாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தியவர்கள் பலர் அதை பயன்படுத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் தவித்து வருகின்றனர். உடனடியாக வாய்ஸ் மெசெஜ் அனுப்பலாம், சிறந்த வீடியோ கால்கள், லைவ் லோக்கேஷன் ஷேரிங் என பல அம்சங்கள் வாட்ஸ் அப்பில் கிடக்கின்றன.
இதில் லைவ் லோகேஷன் ஷேர் செய்வதற்கு வாட்ஸ்அப் இல்லாமலும் ஷேர் பண்ணலாம். வாட்ஸ் அப் இல்லாமல் கூகுள் மேப்பில் ஷேர் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.
கூகுள் மேப்ஸின் வலது மேல் மூலையில் உங்கள் ப்ரொபைல் படத்தை கிளிக் செய்யவும். அதில் லைவ் ஷேரிங் என இருக்கும் அதை கிளிக் செய்யவும்.
அதில் நீங்கள் யாருடன் பகிர விரும்புகிறீர்களோ அவர்களது ப்ரோஃபைலை கிளிக் செய்து ஷேர் செய்யலாம். இதில் நீங்கள் எவ்வளவு நேரத்திற்கு பகிர விரும்புகிறீர்கள் என்பதையும் தேர்வு செய்யலாம், அல்லது உடனடியாக ஸ்டாப் கூட செய்யலாம்.