வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – விவசாயிகள் மறுப்பு

“டெல்லி டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: சில அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர்!” என டிராக்டர் பேரணியை ஏற்பாடு செய்த விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்து அதை நடத்தி வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராடி வருகிறாகள். 

இதற்கிடையே டெல்லி ஐடிஓ சந்திப்புப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் போலீசாரை தாக்கமுயன்று, தடுப்புகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்று படுகாயம் அடைந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதுகுறித்து, டெல்லியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் தங்களுக்கு தொடர்பில்லை என்று விவசாயிகள் சங்கம் விளக்கமளித்துள்ளது. மேலும் அரசியல் பின்புலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியில் பங்கேற்றவர்கள்தான் வன்முறையில் ஈடுபட்டனர் எனவும், வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை விரைவில் பிடித்து தருவோம் என்றும் பாரதிய கிசான் சங்கம் கூறியிருக்கிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x