அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், மற்ற மாவட்டங்களில், மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா சூழலுக்கு இடையே தேர்தல் நடக்க இருப்பதால் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் கூடுதலாக 23 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்க உள்ளனர். . 

அதற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு பணிக்கு எவ்வளவு காவலர்கள் தேவை என்ற விபரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றனர். அதிகபட்ச வாக்குப் பதிவை குறிக்கோளாக கொண்டு பிரபலங்களை வைத்து குறும்படங்கள் தயாரிக்கும் பணியும், துண்டு பிரசுரங்கள், போஸ்டர்கள் அச்சிடும் பணியும் நடந்து வருகின்றன. 

ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், தாசில்தார், சிறப்பு தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என, நான்கு பேர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x