அரசியல் குழு பரிந்துரை கைவிட்டது பேஸ்புக்

பயனர்களுக்கு அரசியல் குழுக்களை பரிந்துரைக்கும் வேலையை இனி செய்யப்போவதில்லை என்று, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

முன்னணி சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக், தன் பயனர்களுக்கு, நண்பர்களையும், குழுக்களையும் பரிந்துரைப்பது வழக்கம். இதில், அரசியல் சார்ந்த குழுக்களை பரிந்துரை செய்யும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

அமெரிக்காவில் பார்லிமென்ட் தலைமையகத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம், பேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
வன்முறையாளர்கள், ஒரே குழுவாக இணைவதற்கு பேஸ்புக் குழு பரிந்துரை உதவியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. 

இதையடுத்து, பயனர்களுக்கு இனி அரசியல் ரீதியான குழுக்களை பரிந்துரை செய்வதில்லை என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவன உரிமையாளர் மார்க் ஜூக்கர்பர்க் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x