ஹூவாய் 5ஜி போன்களுக்கு தடை!

சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரிட்டனில், ஆப்பிள் போன்களுக்கு நிகராக பிரபலமானவை சீனாவின் ஹூவாய் நிறுவன போன்கள். இந்நிலையில், பிரிட்டன் டிஜிட்டல் தொழில்நுட்ப செயலர் வெளியிட்ட அறிவிப்பில்,
“ஹூவாய் நிறுவனம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால், இங்கிலாந்து மொபைல் ஆப்ரேட்டர்கள் 2027ம் ஆண்டிற்குள் தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து சீனாவின் ஹூவாய் நிறுவன 5ஜி கருவிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
அதே போல் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அந்நிறுவனத்தின் 5ஜி கருவிகளை கொள்முதல் செய்யவும் தடை விதிக்கப்படும்.இந்த நடவடிக்கை மூலம் நாட்டின் 5ஜி வெளியீடு ஒரு வருட காலத்திற்கு தாமதமாகும். மேலும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் நிலைமை சீராகும் என்று நம்புகிறேன். ”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.