செல்போனில் மணிக்கணக்கில் கேம் விளையாடிய சிறுவன் திடீர் உயிரிழப்பு

புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் மணிக்கணக்கில் ஆன்லைன் கேம் விளையாடிகொண்டிருந்த 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் 16 வயது மகன் தர்ஷன், செல்போனில் ஃபயர்வால் எனும் ஆன்லைன் கேமை மணிக்கணிக்கில் விளையாடியுள்ளார். காதில் ஹெட்செட் அணிந்து அதிக சத்தத்துடன் கேம் விளையாடிக்கொண்டிருந்த தர்ஷன் திடீரெனச் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.
உடனடியாகப் பெற்றோர் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக ஜிம்பர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறினர்.