அமெரிக்காவில் அடுத்த மாதம் தடுப்பூசி

அமெரிக்காவில் அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி உற்பத்தி தொடங்கும் என டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ளதால் அதற்கு முன்னதாக தடுப்பூசியை கண்டுபிடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது டொனால்டு டிரம்ப் நிர்வாகம். இதற்காக, விஞ்ஞானிகளையும், தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களையும் துரிதகதியில் செயல்பட, சுகாதாரத் துறை வழிகாட்டி வருகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், சி.என்.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியது: “தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகள் முடிவு அடைவதற்கு முன்பாகவே அதன் உற்பத்தி தொடங்கி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் பணி தொடங்கி விடலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x