தமிழகத்திற்கு போதிய வெள்ள நிவாரணம் வழங்கவில்லை – திருச்சி சிவா குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் பேசிய திமுக எம்.பி., திருச்சி சிவா, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று கூறினார். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பேசிய அவர், மக்களின் எதிர்ப்புகளையும் மீறி சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்றார். 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுகின்றனர். அவர்கள் அமைதியுடன் வாழ முடியவில்லை. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு முழு நிவாரணம் வழங்கப்படவில்லை. தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x