சீனாவில் உண்ணிகள் மற்றும் ஈக்கள் மூலம் பரவும் புது வகை செஃப்ட் வைரஸ்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவிலிருந்து கடந்த ஆண்டு வெளியான கொரோனா வைரஸையே உலகத்தால் சமாளிக்க முடியவில்லை. இந்த நிலையில் செஃப்ட் எனும் புது வைரஸ் ஜியாங்சு மாகாணத்தில் பரவியுள்ளது. இந்த வைரஸ் பரவலால் இது வரை 7 பேர் பலியானதுடன் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நஞ்சிங் என்ற பெண் காய்ச்சல் மற்றும் சளி காரணமாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவருக்கு கொரோனாவும் இல்லை. ஆனால் ரத்த அணுக்கள் குறைந்து கொண்டே வந்தது. பரிசோதனையில் அவர்கள் புதுவகை வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
செஃப்ட் என்று அழைக்கப்படும் இவ்வைரஸ் கடும் காய்ச்சல் மற்றும் ரத்த தட்டணுக்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தி இறப்பை உண்டாக்கும் என்கின்றனர். டிக் போர்னே நோய் உண்ணி மற்றும் ஈக்களால் பரவக்கூடியது.
[
