“ஊழியர் ஒருவரும் இளம்பெண்ணும்..” மரண வாக்குமூல வீடியோவை பதிவு செய்து பணியாளர் தற்கொலை..?

கோவை குனியமுத்தூர் பி.கே புதூரை சேர்ந்தவர் ரங்கசாமி (40). மாநகராட்சி தூய்மை பணியாளர்.‌ இவர் மாநகராட்சி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். 

நேற்று முன்தினம் இரவு இவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் அவர் பதிவு செய்த மரண வாக்குமூல வீடியோவை போலீசார் கைப்பற்றினர். 3 நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவில் ரங்கசாமி , ‘‘மருத்துவமனையில் ஊழியர் ஒருவரும் இளம்பெண்ணும் அறையில் தனிமையில் ஒன்றாக இருந்த காட்சியை பார்த்தேன். 

இதனால் மருத்துவமனையில் பெண்கள் ஆடை மாற்றும்போது நான் தவறாக போட்டோ, வீடியோ எடுத்ததாக அபாண்டமாக புகார் சொல்லி என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். என்னால் இனி தலை நிமிர்ந்து வாழ முடியாத நிலைமை உருவாகிவிட்டது. என் சாவுக்கு இந்த 3 பேரும்தான் காரணம்’’ என குறிப்பிட்டுள்ளார்.‌ 

சம்பந்தப்பட்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x