தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் முயற்சி..? – அமைச்சர் தகவல்

சென்னை வரும் சசிகலா அ.தி.மு.க., கொடியை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என டிஜிபி., திரிபாதியிடம் அமைச்சர்கள் புகார் அளித்தனர். பின்னர், நிருபர்களை சந்தித்த அமைச்சர் சண்முகம், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்த சசிகலா, தினகரன் தரப்பினர் முயற்சி செய்து வருகின்றனர் எனக் கூறினார். 

இதற்கிடையே, சசிகலா வரும் 8 ம் தேதி சென்னை வர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அன்று சென்னையில் பேரணி நடத்தவும் அவர் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி,ஜெயக்குமார் மற்றும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர், டிஜிபி திரிபாதியை சந்தித்து சசிகலா சென்னை வரும் போது, அ.தி.மு.க., கொடியை பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என மனு அளித்தார். 

இதன் பின்னர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: சசிகலா சென்னை திரும்புவதில் ஆட்சேபனை இல்லை. அ.தி.மு.க., கொடியை பயன்படுத்தக்கூடாது. 4 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு வரும் சசிகலா அதிமுகவுக்கு உரிமை கோருகிறார். பொது மக்கள் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்து விளைவிக்க திட்டமிடுகின்றனர். 100 பேர் மனித வெடிகுண்டாக மாறுவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த சசிகலா தரப்பு முயற்சி செய்கின்றனர். யார் அதிமுகவினர் இரட்டை இலை என்பதற்கு தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்திவிட்டது. 

அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் இரட்டை இலை சின்னம் யாருக்கு என உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. பழனிசாமி, பன்னீர்செல்வம், மதுசூதனன் நிர்வாகிகளாக இருக்கும் கட்சியே அ.தி.மு.க., என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுகின்றனர்.  

பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரின் முழுக்கட்டுப்பாட்டில் அ.தி.மு.க., உள்ளது. தமிழகத்தில், சசிகலா தரப்பினர் கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். கலவரத்தை ஏற்படுத்த தினகரன் உள்ளிட்டோர் சதி செய்கின்றனர்.ஊரை அடித்து கொள்ளை அடித்த வழக்கில் தண்டனை பெற்றவர் சசிகலா. சசிகலா, தினகரன் தரப்பிடம் இருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டும் என புகார் அளித்தோம். அதிமுக பொது செயலர் சசிகலா இல்லை. அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x