அயோத்தி பள்ளிவாசலை அடுத்து மதுரா… ஈத்கா மசூதியை அகற்ற கோரும் மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்

உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில், கிருஷ்ணர் பிறந்த இடமான கத்ரா கேசவ் தேவ் கோயில் அருகே இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ஷாகி ஈத்கா மசூதியை அகற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்டுள்ள மாவட்ட நீதிமன்றம், , மசூதி நிர்வாகத்துக்கு இதுதொடர்பாக பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பழமையான கேசவ் தேவ் கோயிலின் அரச்சகர் பவான் குமார் சாஸ்திரி சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஷாகி ஈத்கா மசூதி நிர்வாகம் மட்டுமின்றி, லக்னோ சன்னி வக்பு வாரியம், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி அறக்கட்டளை உள்ள கத்ரா கேசவ் தேவ் கோயில், ஸ்ரீ கிருஷ்ணா சேவா சனஸ்தான் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட அரசு வழக்கறிஞர் சஞ்சய் கவுர் கூறுகையில், “இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என்று ஏற்றுக்கொண்டு, விரிவான விசாரணைக்கு வழக்கோடு தொடர்புடைய 4 பிரிவினருக்கும் கூடுதல் மாவட்ட நீதிபதி தேவ் காந்த் சுக்லா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கின் விசாரணை மார்ச் 8-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் 4 பிரிவினரும் பதில்மனுத் தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது “ இந்த மனுவில் பவன் சாஸ்திரி 3 கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில் முதலாவது கேசவ் தேவ் கோயிலுக்குச் சொந்த மான 12.37ஏக்கர் நிலம், அதாவது தற்போது ஷாகி ஈத்கா மசூதி இருக்கும் இடமும் கோயிலுக்குச் சொந்தமானது அதை கோயில் நிர்வாகத்துக்கு பெற்றுத் தர வேண்டும். ஒட்டுமொத்த கோயில் வளாகத்தையும் நிர்வகிக்க தனக்கு அதிகாரம் உண்டு தன்னுடைய முன்னோர்கள் இந்தக் கோயிலின் அர்ச்சகர்களாக சேவை செய்தார்கள் என்பதால், பரம்பரை உரிமையாக, கோயில் அர்ச்சகராக பணியாற்ற உரிமை இருக்கிறது

2-வதாக கடந்த 1967-ம் ஆண்டு மதுரா நீதிமன்றம், அளித்த தீர்ப்பான ஸ்ரீ கிருஷ்ண ஜென்மஸ்தான் சேவா சனஸ்தான் அருகே மசூதி இருக்க அனுமதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்.

3-வது கோரிக்கையாக, மசூதியை கோயிலுக்குச் சொந்தமான இடத்திலிருந்து அகற்ற ஷாகி ஈத்கா மசூதி நிர்வாகத்துக்கும், லக்னோ வக்பு வாரியத்துக்கும் உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த மனு தவிர, ஏற்கெனவே 3 மனுக்கள் மதுரா நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு விசாரணையில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x