எதுவும் தடவாமலே முகச்சுருக்கத்தை நீக்கணுமா? இதோ டிப்ஸ்

முகத்தில் எதுவும் தடவாமலே முகச்சுருக்கத்தை நீக்கணுமா? அப்போ இதையெல்லாம் பாலோ பண்ணுங்க, கண்டிப்பா நல்ல ரிசல்ட் கிடைக்கும். 

சூரிய வெளிச்சம் நேரிடையாக உடம்பில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சத்திலிருந்து பாதுகாக்க கூடிய ஆடைகளைத் தேர்வு செய்து உடுத்த வேண்டும். 

புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும். சருமப் பராமரிப்பு, அழகு சாதன பொருள்கள் இவற்றைத் தாண்டி, இப்படி நாம் செய்ய வேண்டிய சில விஷயங்களை இங்கே பார்க்கலாம். 

இரவில் நன்றாகத் தூங்கினாலே உடலில் முதிர்ச்சி தெரிய வாய்ப்புகள் கிடையாது. உடலும் மனதும் ஓய்வு இல்லாமல் உழைப்பதே மிக முக்கிய பிரச்சனைகளுக்குக் காரணமாக அமைகின்றன. மேலும் ஒரே பக்கமாகப் படுத்துத் தூங்கும் பொழுதே சுருக்கங்கள் உருவாகின்றன. அவற்றினை தவிர்க்க வேண்டும். 

மீன்கள் ப்ரோட்டீன் சத்தினை அதிகம் கொண்ட உணவு பொருளாகும். இது தோலிற்கு மிகச் சிறந்த மருத்துவ குணத்துடன் பயன்படுகிறது. இவற்றினை அதிகமாக உண்பதன் மூலம் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். இதிலிருக்கும் ஒமேகா 3 எனப்படும் நல்ல கொழுப்பு சத்தானது உடலுக்கு நன்மைப் பயக்கக்கூடிய ஒன்றாகும். 

முக பாவனைகளை அதிகமாகப் பயன்படுத்தினால் தோலிற்கு ஏற்படும் அதிக வேலைப் பளுவின் காரணமாகச் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, முகப் பாவனைகளைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கண் பார்வை பிரச்சனை இருப்பவர்கள் ஏதேனும் ஒன்றை வாசிக்க நினைத்தால் கண்ணாடி போட்டு வாசிக்கலாம். சூர்ய வெளிச்சத்தில் பயணிக்க வேண்டியவர்கள் சன் க்ளாஸினை பயன்படுத்தலாம். இவை கண்களை முழுமையாகப் பாதுகாக்கின்றன. கண்களைச் சுற்றி சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு இவை பெரிதும் பயன்படுகின்றன. 

சோப், ஜெல் போன்றவற்றினை பயன்படுத்தி முகத்தினை சுத்தப்படுத்திக் கொண்டே இருங்கள், நீரில் முகத்தினை அடிக்க்டி கழுவுவதன் மூலம் தோலில் எண்ணெய் பிசுகு ஏற்படாமல் தடுக்க முடியும். 

பல்வேறு ஆய்வாளர்களின் கூற்றுப்படி, வைட்டமின் சியானது தோல் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பதற்கு பெரிதும் பயன்படுகின்றன. சூரிய கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதற்கு வைட்டமின் சி கொண்டு உருவாக்க்ப்படும் க்ரீம்கள் பயன்படுகின்றன. 

தினசரி காய்கறி கடைகளில் கிடைக்கும் சோயாவினை பயன்படுத்துவதன் மூலம் முக சுருக்கங்களிடமிருந்து விடை பெறலாம். சோயாவினை அரைத்து முகத்தில் பூசிக் கொள்வது நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கும். 

தேயிலையில் இருக்கும் மிக முக்கிய ஆண்டி ஆக்சிடண்ட்களால் உங்களது தோலினை பாதுகாக்க முடியும். அதிலிருக்கும் அதிகபட்ச ஆற்றலானது தோலினை மிருதுவாகப் பயன்படுத்துவதற்கும் பயன்படுகிறது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x