சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் காத்திருக்கும் ஆதரவாளர்கள்.. சென்னை நெடுஞ்சாலையில் பரபரப்பு

பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையான சசிகலா கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மருத்துவா்களின் அறிவுரைப்படி, தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவா், பெங்களூரிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக சென்னை வருகிறார்.
இந்த நிலையில் பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சசிகலா சென்னை நோக்கி வருகிறார்.
இந்நிலையில், பெங்களூருவில் இருந்து சசிகலா தமிழகம் புறப்பட்ட நிலையில் சென்னை நெடுஞ்சாலையில் சசிகலாவை வரவேற்க அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சென்னை திரும்பும் வழியில் சசிகலாவுக்கு மேள தாளங்கள் அதிமுக கொடியுடன் உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக கொடியை பயன்படுத்தி சசிகலா தமிழகத்திற்குள் வந்தால் அவர் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என கிருஷ்ணகிரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.