திறக்கப்பட்ட இருட்டுகடை அல்வா; திரண்ட மக்கள் கூட்டம்!

நெல்லை என்றால் அனைவரின் நினைவிற்கும் வருவது அல்வாதான். இந்த திருநெல்வேலி அல்வா உலக புகழ் பெற காரணமாக இருந்தவர், நெல்லை இருட்டுகடை அல்வா முதலாளி ஹரிசிங் . கடந்த மாதம் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஹரிசிங் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .

பிரபல அல்வா கடை என்பதால் அங்கு ஏராளமானவர்கள் வந்து சென்று இருப்பார்கள்; மேலும் வாடிக்கையாளர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடை பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கடை பகுதி முழுவதும் தடுப்புகள் கட்டப்பட்டு அங்கு யாரும் செல்ல முடியாத அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 20 நாட்களாக திருநெல்வேலி அல்வா கடை பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கடை நேற்று முதல் திறக்கப்பட்டது. கடை திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் வழக்கம் போல் கூடத் தொடங்கிவிட்டது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x