சென்னையில் நேற்று 55 பேர் கைது.. 230-க்கும் மேற்பட்ட மாஞ்சா நூல் மற்றும் பட்டம் பறிமுதல்
சென்னையில் மாஞ்சா நூல் விற்றதாக நேற்றிரவு முதல்55 பேரை காவல்துறையினர்கைது செய்யதுள்ளனர்.
சென்னை மூலக்கரை பகுதியில் சென்ற போது மாதவன் என்பவரின் கழுத்தை மாஞ்சா நூல் பட்டம் அறுத்தது. இதையடுத்து சென்னை காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
மாதாவரம், பூக்கடை பகுதிகளில் சோதனையிட்ட காவல்துறையினர் தடையை மீறி மாஞ்சா நூல் விற்றதாக 55 பேரை கைது செய்தனர். மேலும், 230-க்கும் மேற்ப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் பட்டங்களை பறிமுதல் செய்தனர்.