வழி தவறிய சீன நாட்டினர்..மனிதாபிமானத்துடன் மீட்ட இந்திய ராணுவம்!

வடக்கு சிக்கிமில் சுமார் 17,500 அடி உயரத்தில் மூன்று சீன குடிமக்கள் தங்கள் வழியை தவற விட்டு தவித்தனர். அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்திய படைவீரர்கள், அவர்களை காப்பாற்றி உணவு, ஆக்சிஜன் வழங்கினர்.

இந்திய – சீன எல்லையில் கடந்த ஒரு வாரமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா அதிகளவிலான படைகளை குவித்து வருகிறது. அவர்களை ஆக்கிரமிக்க விடாமல் தடுக்கும் பணியில் இந்திய ராணுவம் இறங்கியுள்ளது.

அதே சமயத்தில் வடக்கு சிக்கிமில் உள்ள ஒரு பகுதியில், பூஜ்யம் டிகிரி தட்ப நிலை உள்ள பகுதியில், சிக்க தவித்த சீனர்களை காப்பாற்ற நமது நாட்டின் வீரர்கள் தயங்கவில்லை. செப்டம்பர் 3 ம் தேதி வடக்கு சிக்கிமில் ‘ஜீரோ டிகிரி’ தட்பநிலையில், வழி தவறி சிக்கி தவித்த ஒரு பெண் உட்பட மூன்று சீன குடிமக்களை, நமது பெருமை மிகு ராணுவ வீரர்கள் காப்பாற்றினர்.

இந்த மூன்று சீன குடிமக்கள் வடக்கு சிக்கிமின் சுமார் 17,500 அடி உயரத்தில் உள்ள பகுதியில், வழியை தவற விட்டு எங்கே போவது என தெரியாமல் தவித்தனர். இந்திய ராணுவ வீரர்கள் அவர்களுக்கு ஆக்ஸிஜன், உணவு மற்றும் சூடான உடைகள் உள்ளிட்ட மருத்துவ உதவிகளை வழங்கினர். இந்திய ராணுவத்துக்கு சீனர்கள் நன்றி தெரிவித்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x