வெங்காய வரத்து குறைவு.. சின்ன வெங்காயத்தின் விலை 150 ரூபாய்க்கு விற்பனை

வெங்காயம் வரத்து குறைவால் மதுரையில் சின்ன வெங்காயத்தின் விலை 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.

தமிழகத்தில் பெய்த பருவம் தவறிய மழையினால் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சின்ன வெங்காய சாகுபடி அழுகல் நோயால் பாதிக்கப்பட்டது. இதனால் சந்தைகளுக்கு வழக்கமான வரும் அளவை விட சின்ன வெங்காயம் வரத்து தற்போது குறைவாக உள்ளது. கடந்த மாதம் சரிவாக காணப்பட்ட வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவனி காய்கறி சந்தைக்கு தேனி, திண்டுக்கல், தர்மபுரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து வெங்காயம் வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக வரத்து குறைந்துள்ளதால் மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 130 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ 130 முதல் 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

இதனிடையே பெரிய வெங்காயத்தின் வரத்து வழக்கமான அளவில் இருந்து வருவதால் பெரிய வெங்காயத்தின் விலை மொத்த விற்பனையில் 40 முதல் 45 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 60 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x