‘இப்போதுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது இயலாதது’ அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவல் எதிரொலியால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந் நிலையில் அடுத்த கட்ட கல்வியாண்டை தொடங்கும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்த தொடங்கிவிட்டன. அதன் காரணமாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த தமிழக அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.
ஆன்லைன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காது என்பதால் தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
ஆனால் இப்போதைக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
இப்போது உள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது சாத்தியம் இல்லாதது. ஆகையால் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
14 சேனல்கல் பாடங்களை ஒளிபரப்ப முன் வந்துள்ளன. மூன்றே நாட்களில் பாடம் நடத்தும் பணி தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.