மைதா ஏன் கெட்டது?

மைதா என்றாலே தீமைதான். மைதாவை உட்கொள்வதால் நமது இரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவு கூடுகிறது.
நம்மை சுற்றியுள்ள அதிகபட்ச இனிப்பு வகைகள் யாவும் மைதாவைக் கொண்டே செய்யப்படுகிறது. குழந்தைகள் அன்றாடம் உண்ணும் பிஸ்கட் கூட மைதாதான்.
சரி! மைதா கோதுமையிலிருந்து தானே பெறப்படுகிறது என்கிறீர்கள்..? ஆமாமெனில் மைதா பழுப்பாக தானே இருக்கவேண்டும்! ஏன் வெள்ளை வெளீரென்று உள்ளது.. காரணத்தை காண்போமா..?
இந்த அரைபட்ட கோதுமையின் கடைசி வெளியீட்டை (மைதாவை) வெண்மையாக்கும் வேதிப்பொருள் பென்சோயில் பெராக்சைடு..
இதுமட்டுமல்லாமல் சுவையூட்டிகள் மற்றும் பல வேதிப்பொருட்கள் சேர்க்கப் படுகின்றன.
இந்த வேதிப்பொருள்கள் கழிப்பரையை தூய்மைபடுத்த பயன்படுகிறது என்பது பகீர் உண்மை. நம் குடலை பதம்பார்க்கும் இந்த மைதா நமக்கு தேவைதானா?