உடல் எடையை குறைக்க வைக்கும் தண்ணீர்…. எப்படி பருகவேண்டும்…

தற்போது அதிகரித்து வரும் உடல் எடையைக் குறைப்பதற்காக பல்வேறு சிகிச்சை முறைகள், டயட்கள் உள்ளன. ஆனால், உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும். 

அந்த வகையில் தற்போது டிடாக்ஸ் தண்ணீர் பிரபலமாகிவருகிறது. முற்றிலும் இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த நீரை பருகுவது மூலம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்ற முடியும் என்கின்றனர். இவற்றை எப்படி தயாரிக்கலாம் எனப் பார்ப்போம். 

சுத்தமான 1 லிட்டர் குடிநீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் ஒரு எலுமிச்சையை வட்டமாக வெட்டி போட வேண்டும். பிறகு புதினா இலைகள் ஒரு கை அளவிற்கு போட வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறிதாக வெட்டி தண்ணீரில் போட வேண்டும். 

அதன்பின் தட்டு போட்டு மூடிவிட்டு 4-5 மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கலாம். இதனை தொடர்ந்து தினமும் குடித்து வருவதன் மூலம் உடல் எடை குறைக்க உதவும். இஞ்சி உடலில் உள்ள பித்தத்தை குறைக்கும். தேவையற்ற கொழுப்புகள் கரைவதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும். 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x