இந்தோனேசியாவில் நிலச்சரிவு.. 2 பேர் உயிரிழப்பு, 16 பேர் மாயம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 16 பேர் மாயமாகியுள்ளனர். 

கிழக்கு ஜாவாவின் நங்கன்ஜுக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் பாதுகாப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் பங்கேற்றுள்ளதாகத் தேசிய பேரிடர் தொடர்பாளர் ராதித்யா ஜதி தெரிவித்தார். 

மேலும், இதுதொடர்பாக அவர் கூறியது, ஞாயிற்றுக்கிழமை சுற்றியுள்ள மலைகளிலிருந்து மண் உருண்டதில் குறைந்தது எட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. 21 பேர் மண்ணில் புதைந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். மண்ணில் புதைந்த இரண்டு பேரின் உடல்கள் சடலங்களாக மீட்டுள்ளனர் மற்றும் காயமடைந்த மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 

மேலும் காணாமல் போன 16 கிராம மக்களை மீட்புப் படையினர் தேடி வருகின்றனர். மோசமான வானிலை மற்றும் கனரக உபகரணங்கள் இல்லாததால் தேடுதல் பணி முடங்கியுள்ளது. ஒரேநாளில் பெய்த மழையால் மாகாணத்தின் பிற மாவட்டங்களில் உள்ள ஆறுகள் கரைபுரண்டு ஓடத் தொடங்கியுள்ளது. 

இந்தோனேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் பருவகால மழையால் அடிக்கடி நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x