போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை சாலை மறியல்

புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக டெல்லியில் அரியானா, பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை தங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று விவசாயிகள் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் குருபூர் சாந்தகுமார் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்து உள்ளது. இதனால் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 18-ந் தேதி(நாளை) கர்நாடகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த திஷா ரவியை கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். சமையல் கியாஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.