இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை- செப்.30 கடைசி தேதி!!!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் துறையில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து இப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.54 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இணை ஆராய்ச்சியாளர்

கல்வித் தகுதி : வேளாண்மைத் துறையில் பி.எச்டி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 40 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.54,000

விண்ணப்பிக்கும் முறை :இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.iihr.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 30.09.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : IIHR, Hesaraghatta Lake Post, Bangalore- 560089

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.iihr.res.in லிங்க்கை கிளிக் செய்யவும்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x