கொரோனா தொற்றுடன் சர்ச்சுக்குள் நுழைந்த நபர்; இப்போ அவதிபடும் 91 பேர்

அமெரிக்காவின் ஓஹிஹோ மாகாணத்தில் கொரோனா தொற்றுடன் தேவாலயத்தில் வழிபாடு நடத்த சென்ற கொரோனா நோயாளியால், 91 பேருக்கு கொரோனா தொற்று பரவிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்ட அந்த மாகாண கவர்னர், மைக் டே வைன், கொரோனா காட்டுத் தீ போல, காட்டுத் தீ போல பரவி வருகிறது. மிகவும் பயமாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது எனக் கூறியுள்ளார்.

மேலும், கடவுள் மேல் அதிக நம்பிக்கை கொண்ட நம்முடைய தலைவர்கள் இந்த கொரோனா காலத்திலும் தேவாலயங்களை மூடாமல் மக்கள் வந்து வழிபடாலாம் என அனுமதி அளித்துள்ளனர்.

பொதுமக்களும் சுயக் கட்டுப்பாடு ஏதும் இன்றி, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக தேவாலயம் போன்ற பொது இடங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதனால், கொரோனா பரவலை இங்கு கட்டுப்படுத்துவது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று பரவிய நிலையில், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் 56 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தேவாலய சேவையில் ஈடுபட்டுள்ளார்.

அவரை போலவே தேவாலய சேவையில் ஈடுபட்ட 53 பேரில் சுமார் 18 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று பரவ, அவர்கள் மூலமாக சுமார் 91 பேருக்கு கொரோனா பரவியது என விளக்கமாகத் தெரிவித்தார்.

ஓஹிஹோ மாகாணத்தில் இதுவரை 96 ஆயிரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x