வயதான தாயை கவனிக்க மனமின்றி கொலை செய்து எரித்துக் கொன்ற குடும்பம்!

மதுரையில் ஊரடங்கினால் வருமானமின்றி தவித்த குடும்பம் ஒன்று படுத்த படுக்கையாக இருந்த தாயை கவனிக்க மனமின்றி தலையனையால் அமுக்கி கொலை செய்து ஆற்றில் போட்டு எரித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குண்டாறு கால்வாயில் ஒரு மூதாட்டியின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரித்தனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை பரிசோதித்ததில் மூன்று பேர் மூதாட்டியின் உடலை தள்ளுவண்டியில் வைத்து தள்ளிச் செல்வது தெரிந்தது.

அந்த மூதாட்டி திருமங்கலம், பசும்பொன் நகரில் வசித்துவந்த கருப்பாயி என்பதைக் காவல்துறையினர் உறுதி செய்தனர். அவர் குடும்பத்தினரை பிடித்து விசாரித்ததில் அவரைக் கொலை செய்து எரித்தது தாங்கள் தான் என அவர் மகளும், உறவினர்களும் ஒப்புக்கொண்டனர்.

மூதாட்டி கருப்பாயியின் மகள் பழனியம்மாள், பேரன் காளிதாஸ், பேத்தி காளீஸ்வரி, மருமகன் வசந்தகுமார் ஆகியோர் இக்கொலையில் தொடர்புடையவர்கள். தேனியைச் சேர்ந்த இவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை மரணமடைந்ததால், திருமங்கலத்தில் குடியேறி உள்ளனர்.

கூலி வேலை பார்த்துவந்த எங்களுக்கு கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் போனது. வீட்டு வாடகை தராததால் காலி செய்யும்படி கூறினார்கள். திருநகரில் ஒரு வீடு பார்த்தோம். அங்கு படுத்த படுக்கையாக இருக்கும் தாயை அழைத்துச் செல்ல முடியாது அவரை திருமங்கலத்திலேயே விட்டுச் செல்லவும் மனமில்லை. அதனால் கொன்றுவிட்டோம் என கூலாக சொல்லியுள்ளார் அவரது மகள் பழனியம்மாள். இதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x