தங்கம் விக்கிற விலையில்.? தங்கத்தினால் செய்த இனிப்பு, கிலோ ரூ.9,000!!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கோல்டு காரி என்ற பெயரில் தங்கத்திலான இனிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்விலை கிலோ ஒன்றிற்கு ரூ.9,000 ஆக நிர்ணியிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இனிப்பு கடை உரிமையாளர் ரோகன் கூறியதாவது: கோல்டு காரி எனப்படும் இனிப்புவகை இந்தாண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தில் தங்கத்தின் பயன் குறித்து கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தங்கத்தை இழைத்து இந்த இனிப்பு வகை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு கோல்டு காரி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை ஒரு கிலோ ரூ.9,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஷரத் பூர்ணிமா விழாவிற்கு ஒரு நாள் கழித்து கொண்டாடப்படும் சாண்டி பட்வோவுக்கு முன்னதாக இந்த இனிப்பு வகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் சந்தை நிலவரம் மெதுவாக இருப்பதால் இதற்கான தேவை குறைவாக உள்ளது. வரும் நாட்களில் நல்ல வரவேற்பை பெறும் என நம்புவதாக அவர் கூறினார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x