“ஏய் அந்த நாயை வெளிய துாக்கிட்டு போங்கப்பா” – தொண்டரை கௌரவித்த ராஜா

பெரம்பலுாரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா, தொண்டரை நாய் என திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து பெரம்பலுாரில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. துணை பொதுச் செயலர் ராஜா பங்கேற்றார். இதற்காக பெரம்பலுார் காந்தி சிலை முன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. ராஜா மேடை ஏறியதும் கீழே மது போதையில் கட்சி கொடி மற்றும் பதாகைகளுடன் நின்றிருந்த ஒரு தொண்டர் ‘ராஜா வாழ்க வாழ்க’ என கோஷமிட்டார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பேசினர். பின் ராஜா பேசினார். அப்போது அதே தொண்டர் தொடர்ந்து ‘ராஜா வாழ்க’ என கோஷமிட்டார். இதனால் கோபமடைந்த ராஜா, ‘ஏய் அந்த நாயை வெளிய துாக்கிட்டு போங்கப்பா’ என கூறினார். பொது மேடையில் தொண்டரை நாயே என திட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.