ஆந்திராவில் தீப்பற்றி எரிந்த கோவில் தேர்: பக்தர்கள் அதிர்ச்சி

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், கோவில் தேர் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிழக்கு கோதாவரி மாவட்டம், அந்தர்வேதியில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர், கோவில் வளாகத்தில் உள்ள கூடாரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் தேர் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. வரலாற்று சிறப்புமிக்க தேர் எரிந்ததால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.