ஸ்டாலின் காவலருக்கு கொரோனா!

ஸ்டாலின் வாகனப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என பல தரப்பினரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. இந் நிலையில் எதிர்க் கட்சி தலைவரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வாகனப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டாலின் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.