காஞ்சிபுரம் ஆட்சியருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
கோவை ஆட்சியர் ராசாமணியை தொடர்ந்து காஞ்சிபுரம் ஆட்சியருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் பொன்னையா கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.