கறுப்பர் கூட்டத்துக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்

கந்தசஷ்டி கவச பாடலை அவமதித்ததாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சென்னையில் பாஜகவினர் போராட்டம் நடத்தினார்கள்.

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூ-டியூப் சேனலில் இந்து மத கடவுளர்களை இழிவுப்படுத்தும் கருத்துக்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. பல்வேறு கட்சியினரும், பிரபலங்களும் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்வதுடன், நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினர்.

இதையடுத்து,‘கந்த சஷ்டி கவசம்’ குறித்து அவதூறு பரப்பியதாக கூறி, கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக சென்னையில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக நிர்வாகிகள் அனைவரும் அவரவர் வீடுகளில் அறப்போராட்டம் செய்தனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x