நாயிடம் சண்டையிட்டு தங்கையை காப்பாற்றிய 6 வயது சிறுவன்!

அமெரிக்காவில், நாயிடம் சண்டையிட்டு போராடி, தன் குட்டித் தங்கையை மீட்ட 6 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சமூகவலைத்தளங்களில் லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

அமெரிக்காவின் வையோமிங் பகுதியிலுள்ள சயன் நகரில் வசிக்கும் பிரிட்ஜர் என்ற 6 வயது நிரம்பிய சிறுவன், தன் தங்கையை நாய் கடிக்க வந்த போது, எதிர்த்து நின்று போராடி தங்கையை காப்பாற்றியிருக்கிறான். கடந்த 9ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் சிறுவனின் முகம், தலையில் 90 தையல்கள் போடப்பட்டன. தற்போது சிறுவன் நலமாக உள்ளான்.

இதுகுறித்து சிறுவனின் மாமியான நிக்கி வாக்கர் பதிவிட்டதாவது: “என் சகோதரனின் மகன் ஒரு ஹீரோ. தன் தங்கையை நாய் கடிக்க வந்த போது, முன்னால் வந்து நாயுடன் போராடி காப்பாற்றியிருக்கிறான். இதில் அவன் முகம், தலையில் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. நாய் தாக்கி நான் இறந்தாலும் பரவாயில்லை. தங்கையை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து நாயுடன் சண்டை போட்டுள்ளான்.”என்று தெரிவித்துள்ளார்.

இந்த சிறுவனுக்கு பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x