பாலியல் சேட்டை செய்த ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் போக்சோவில் கைது!

சென்னையில் வசிக்கும் தேசிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை(வயது 14) ஒருவர், சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில், ‘எனது பயிற்சியாளர், அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு செக்ஸ் தொல்லை கொடுத்தார். நான், பலமுறை எச்சரித்த பின்னும் அவர் தொடர்ந்து தொல்லையில் ஈடுபட்டு மிரட்டுகிறார். அன்று நான் தூங்கிக்கொண்டிருந்தபோது, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். ” என்று தெரிவித்தார்.

இந்த புகார் தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். புகார் கொடுத்தவர், 14 வயது சிறுமி என்பதால், பயிற்சியாளர் மகேஷ் (வயது 30),‘போக்சோ’ சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x