மினிமலிசம் – மகிழ்ச்சியைப் பெருக்கும் கலை !

மினிமலிசம் என்றால் தேவைகளைக் குறைத்து மகிழ்ச்சியைப் பெருக்கும் ஒரு கலை ஆகும்.

கடந்த ஓரிரு வருடங்களாக மினிமலிசம் என்ற ஒரு வகை கலாச்சாரம் ஜப்பானிய இளைஞர்களிடம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதாவது தேவையில்லாத பொருட்களைக் கடாசிவிட்டு சில செட்டு துணி மணிகளோடு, அதிக உடைமைகள் இல்லாமல் எளிய வீடுகளில் பல இளைஞர்கள் நிம்மதியாக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இதையும்விட சுவாரஸ்யம், அதிக பொருட்களை வாங்கி குவிக்கும் நபர்களோடு தங்களின் நட்பைகூடத் துண்டித்துக் கொள்கின்றனர். இப்படி வாழ்வதால் தங்களுக்கு பயணம் செய்வதற்கு, நண்பர்களோடு சேர்ந்திருப்பதற்கு, முக்கியமாக, தேவையில்லாத வீட்டு வேலைகளை செய்யாமல் இருப்பதற்கு, என்று பல நன்மைகள் இருப்பதாக கூறுகின்றனர். இதற்கான முன்னுதாரணத்தை ஸ்டீவ் ஜாப்ஸ், ஜென் தத்துவம் ஆகியவற்றிலிருந்து எடுத்திருக்கின்றனர்.

இதில் இன்னொரு நல்ல விஷயமிருப்பதாகவும் பல மினிமலிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிற ஜப்பானில், இப்படி குறைந்த உடைமைகளோடு வாழ்வதால், தேவையில்லாத விபத்துக்களைத் தவிர்க்க முடிகிறதென்று

மினிமலிச யுடியூப் விடியோ ஒன்றில் (How many towels do you need) என்று கேட்கப்பட்டுகிறது.

அதற்கு , ஒரு அம்மையார், “நான், கணவர், மூன்று குழந்தைகள் என வீட்டில் ஐந்து பேர். மினிமலிசம் சின்னதாக ஆரம்பிக்கலாம் என நினைத்தேன். டவல்கள் நிறைய இருந்ததால் அதில் இருந்து ஆரம்பிக்கலாம் என நினைத்தேன். நான் டவல் வாங்கும் கம்பனிகள் “கோடைகாலத்துக்கு ஒரு டவல், குளிர்காலத்துக்கு ஒரு டவல், பீச்சுக்கு போகையில் ஒரு டவல், ஸ்விம்மிங் பூல் போகையில் ஒரு டவல், குழந்தைகளுக்கு ஒரு டவல்” என ஏராளமான் டவல்களை அறிமுகபடுத்தி வீடு முழுக்க ஏகபட்ட டவல்களாக நிரப்பி வைத்திருந்தேன்.

மினிமலிசத்தின்படி “ஒரு வீட்டில் ஒரு ஆளுக்கு இரு டவல்கள் தான்”

வீட்டுகாரர் பேஸ்மெண்டில் மும்முரமாக டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஹனி, உங்களுக்கு ரெண்டு டவல் போதுமா?” என கேட்டேன்

அவர் என்ன என்பதே தெரியாமல் தலை ஆட்டினார்.

மற்ற அனைத்து டவல்களையும் எடுத்து டிஸ்போஸ் செய்துவிட்டேன். மொத்தமாக ஐந்துபேருக்கும் பத்து டவல்கள்தான்.

இப்போது மூன்று வருடம் ஆகிறது. என்னைதவிர யாருக்கும் இத்தனை டவல்கள் காணாமல் போனது தெரியாது. யாரும் டவல் இல்லாமல் ஈரமாகவும் இல்லை.

“மினிமலிசம் முறையால் நாம் பயன்படுவது மட்டுமல்லம்மால், தேவையில்லாத பொருட்களை கழிப்பதன் மூலம் அது பொருள் இல்லாமல் கஷ்டப்படும் வறியவர்களுக்கும் உதவியாக இருக்கும்”. என்பதே மினிமலிசத்தின் சிறப்பு

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x