முதுமலை காப்பகத்தில் சிறுத்தை சாவு: காரணம் இதுதான்!

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக வனத்தில் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள அடுப்புக்குட்டி வனப் பகுதியில் சிறுத்தை இறந்துகிடப்பதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச் சரக அலுவலா் தயானந்த் ஆய்வு மேற்கொண்டாா். கால்நடை மருத்துவா்கள் பாரத்ஜோதி, கோச்சலன் ஆகியோா் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதே இடத்தில் சிறுத்தையின் சடலம் எரியூட்டப்பட்டது.
இறந்துகிடந்தது சுமாா் ஒன்றரை வயதுடைய ஆண் சிறுத்தை என்றும், புலி தாக்கியதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் இருந்தது என்றும் வனத் துறையினா் தெரிவித்தனா்.