பிளாஸ்மா தானம் செய்தால் 2 ஆயிரம் ரூபாய்… எங்கு தெரியுமா?

பிளாஸ்மா தானம் செய்தால் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் புதிய அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வெளியிட்டு உள்ளார்.
கொரோனா நோயாளிகளுக்கு தரப்படும் பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலன்களை தந்து வருகிறது. ஆகையால் பிளாஸ்மா தானம் செய்யும் நபர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். இந்த விவரத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.