மாணவர்களுக்கான பிரத்யேக ‘கட்டிப்பிடி’ ஆடை தயாரித்த ஆசிரியர்

பிரேசிலில் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்காக உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு ‘கட்டிப்பிடி’ ஆடை அனைவரையும் கவர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பரவல் அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு நாளொன்றுக்கு 60 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி ஆசிரியரான MAURA SILVA, ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள தனது மாணவர்களை சந்திக்க முடிவு செய்தார்.

இதையடுத்து தொற்று பரவாமல் இருப்பதற்காக மாணவர்களுக்கான பிரத்யேக ஆடையினை அவர் உருவாக்கினார். இதைத்தொடர்ந்து மாணவர்களை நேரில் சென்று சந்தித்த MAURA SILVA, மாணவர்களுக்கு தான் தயாரித்த ஆடையை அணிவித்து, அவர்களை கட்டிப்பிடித்து தனது நேசத்தை வெளிப்படுத்தினார்.

ஆசிரியரின் இந்த மனித நேய செயல் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x