கலை, அறிவியல் படிப்புக்கு 90 ஆயிரம் விண்ணப்பம்; பின்தங்கிய பொறியியல் ஆர்வம்!

கலை, அறிவியல் படிப்புகளில் சேர கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
அரசு மற்றும் தனியார் கலை,அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு இணையவழியில் விண்ணப்பப் பதிவு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் www.tngasa.in, www.tndceonline.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில் கலை, அறிவியல் படிப்புகளில் சேர நேற்றுமாலை 6 மணி நிலவரப்படி 89,538 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல், ஜூலை 15-ல்தொடங்கப்பட்ட பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 80,009 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்புக்கு 6 நாட்களில் 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஒரேநாளில் 90 ஆயிரம் பேர் வரை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.