உலகின் நம்பர் 1 ஆல்ரவுண்டர் ஆனார் பென் ஸ்டோக்ஸ்!!!18 மாத சாதனை முறியடிப்பு…

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியில், 250 ரன்களை எடுத்ததுடன், 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதையடுத்து, ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் நம்பர் 1 இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

2வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஹோல்டரைக் காட்டிலும் 54 புள்ளிகள் பின் தங்கியிருந்த பென் ஸ்டோக்ஸ் இப்போது அவரைக் காட்டிலும் 38 புள்ளிகள் கூடுதல் பெற்று ஹோல்டரைப் பின்னுக்குத்தள்ளி நம்பர் 1 ஆல் ரவுண்டர் ஆனார்.

இதன் மூலம் ஹோல்டரின் 18 மாத கால நம்பர் 1 ஆல்ரவுண்டர் இடத்தை முறியடித்து பென் ஸ்டோக்ஸ் அந்த இடத்துக்கு வந்துள்ளார். 2006-ல் ஆண்ட்ரூ பிளிண்டாப் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராகத் திகழ்ந்தார், அவருக்குப் பிறகு இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தற்போது இந்த தனித்துவ இடத்தைப் பிடித்துள்ளார்.

மேலும் பென் ஸ்டோக்ஸ் தற்போது எடுத்துள்ள 497 தரவரிசைப் புள்ளிகள், ஜாக் காலீஸுக்கு (517 புள்ளிகள், 2008) அடுத்த இடத்தில் உள்ளது.

இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3ம் இடத்திலும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 4ம் இடத்திலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 5ம் இடத்திலும் உள்ளனர்

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x